ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா - JRC மாணவர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணர்வு ப்பேரணி - kalviithal

Latest

Thursday, October 15, 2026

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா - JRC மாணவர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணர்வு ப்பேரணி

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா - JRC மாணவர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணர்வு ப்பேரணி

ஒரத்தநாடு: பள்ளிக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம்,  ஜூனியர் ரெட்கிராஸ் ஒரத்தநாடு ஒன்றியம் நடத்தும் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா 2026, JRC மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் அமைதிப்பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒரத்தநாட்டில் இன்று (14.10.2026) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றினார்.

 திருமதி வெ.பேபி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சைமணி ஜெனிவா ஒப்பந்தம் பற்றி உரையாற்றினார். இப்பள்ளியின்தலைமை ஆசிரியர் M.சுமதி தலைமை தாங்கினார் . மாண்பமை K.S.இனியவன்  நீதியரசர் J&M Court ஒரத்தநாடு, அவர்கள் ரெட்கிராஸ் கொடியேற்றி,போதை தடுப்பு மற்றும் நல்வாழ்வு" என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார்.




பயிற்சி முகாமில் " "தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை" என்ற தலைப்பில் திரு. வி.செல்வம் அவர்களும் சிறப்பு பயிற்சி வழங்கினர். போட்டிகள் பொறுப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி  750 மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் பேரணி  நிகழ்வு நடத்திட ஏற்பாடுகள் செய்தார்.


விழாவில் இணை ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, ஒரத்தநாடு ஒன்றிய ரெட்கிராஸ் தலைவர் நாராயணசாமி, ஆயுட் கால உறுப்பினர் செல்வம், மற்றும் சிவநேசன், அன்பழகன் ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் பெருமக்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.அடுத்தநிகழ்வாக போட்டிகளில்வென்ற மாணவர்களுக்கு வட்டாட்சியர் அருள்மணி பரிசு வழங்கினார்.

நிறைவாக JRC  மாணவர்கள் அமைதிப்பேரணி நடத்தினர்.இறுதியாக K.பாலமுருகன் இணை ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.